• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாதம்தோறும் இனி சிலிண்டர் விலை உயராது

December 28, 2017 தண்டோரா குழு

மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை மத்திய அரசால் திரும்பப்பெற உள்ளதால் இனி மாதம் தோறும் சிலிண்டர் விலை உயராது.

கடந்த ஜூலை 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மாதம் தோறும் சிலிண்டர் விலையை 2 ரூபாய் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. காஸ் மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதன்படி சரியாக எல்லா மாதமும் ரூபாய் 2 விலை உயர்ந்தது.

பின் 2017 ஜூனில் இருந்து 4 ரூபாய் விலை உயர்த்த மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடித்தட்டு மக்களும், மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தும் வீடுகளும் மிகவும் அதிகமாக அவதிக்குள்ளாகினர். இதனால் மத்திய அரசுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

இதனையடுத்து, மக்களின் எதிர்ப்பால் மத்திய அரசு இந்த நடைமுறையை திரும்ப பெற்று இருக்கிறது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதமே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மாதம்தோறும் விலை உயராமல் சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து அவ்வப்போது மட்டுமே விலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க