• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக்கிற்கு ஜனவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

December 26, 2017 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை வழக்கில் கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்தாண்டு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சசிகுமார் கொலை வழக்கில் ஏற்கனவே, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக்கை நேற்று பொள்ளாச்சி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, கோவை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க