• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநிலங்களவையில் சச்சினை பேசவிடாமல் காங்கிரஸ் எம்.பிக்கள் அமளி

December 21, 2017 தண்டோரா குழு

மாநிலங்களவையில் முதல் முறையாக பேச நினைத்த சச்சினை பேசவிடாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரகசியமாக சந்தித்து பேசியதாக குற்றம்சாட்டினார். இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கோஷங்கள் மற்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. அப்போது இந்திய விளையாட்டின் எதிர்காலம் பற்றி, நியமன எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் பேச முயன்றார். அப்போது, காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு சச்சின் பேசுவதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இதையடுத்து, தொடர்ந்து அமளி நீடித்தததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முதல் முறையாக பேச நினைத்த சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டது வெட்கக் கேடான செயல் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க