• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு – முக.ஸ்டாலின்

December 21, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது என திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு எதிர்பார்த்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சைனி அதிரடி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின்,

“அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.பொய் கணக்கை காட்டி, சித்தரிக்கப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் உண்மையாக வெளியிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் காட்டப்பட்ட முனைப்பை விட அதிகமாக தீர்ப்பு செய்தியை இப்போது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க