• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது – சோனியா காந்தி

December 16, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது – சோனியா காந்திகாங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது என சோனியா காந்தி கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் பேசிய சோனியா காந்தி,

கட்சி தலைவராக பொறுப்பேற்றதற்கு ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிக்கிறது.பல்வேறு சவால்கள் நம் முன் காத்து கிடக்கிறது.சவால்களை சாதனையாக்குவார் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நான் தலைவராக பொறுப்பேற்ற போது அச்சத்தில் இருந்தேன்.

ஏனெனில் காங்கிரஸ் கட்சியை நான் வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதனை முறியடித்து இத்தனை ஆண்டு காலம் பயணித்துள்ளேன் என்று கூறினார்

மேலும் படிக்க