• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாமல்லபுரம் அருகே ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு

December 15, 2017 தண்டோரா குழு

கடலூரில் ஆய்வு பணி முடித்துவிட்டு சென்னை சென்ற ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்ற கார் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் அவ்வபோது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்று கடலூர் மாவட்டம் அம்பேத்கர் நகரில் தூய்மை பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். அதைபோல், திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி செம்மண்டலம், கம்பியம்பேட்டை வழியாக கடலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று ஆளுநர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், கடலூரில் ஆய்வு செய்து விட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பும் போது காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த ஆளுநரின் பாதுகாப்பு கார் சாலையை கடக்க முயன்றோர் மீது மோதியது. இதில், இருவர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

மேலும் படிக்க