• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதுநிலை மருத்துவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 4, 2017

கோவையில் முதுநிலை மருத்துவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு இன்று(டிச 4)மனு அளித்தனர்.

அரசு சாரா மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 465 காலி பணியிடங்களை,காலிப்பணியிடமாக அறிவிக்க வலியுறித்தி கடந்த 18 நாட்களாக போராட்டம்  நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவையில் முதுநிலை மருத்துவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று
(டிச 4) மனு அளித்தனர்.

தமிழ்நாடு முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் கலந்தாய்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களை கொண்டு பணியிடத்தை நிரப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களாக போராட்டம் நடந்து வருகின்றது.

இந்நிலையில்,கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கடந்த 5 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட  முதுநிலை மருத்துவ மாணவர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்  ஒரு பகுதியாக இன்று மருத்துவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும்,அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அனுபவம் பெற்ற அரசு
மருத்துவர்களுக்கும்,அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்விலும், பணி நியமனத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம் எனவும் அதனைக் கருத்தில் கொண்டு தற்போது முடிவடைந்த பணி நியமனத்தை ரத்து செய்து வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறித்தினார்.

மேலும் படிக்க