• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு ரயில்வே மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது கணித ஒலிம்பியாட்!…

November 29, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே இளம் மாணவர்களின் உள்ளத்தில் கணிதம் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க பள்ளிகளுக்கிடையிலான கணித ஒலிம்பியாட் ஒன்றை துவக்கி நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு, இரண்டாவது கணித ஒலிம்பியாட், ஈரோட்டில் (ஈரோடு ரயில் நிலையம் பின்புறம்) உள்ள ரயில்வே மேல்நிலைப்பள்ளியில் நாளை (30.11.2017) காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது.

மேலும்,இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமைப் பணியாளர் நல அலுவலர் திருமதி சுனிதா வேதாந்தம் சிறப்பு விருந்தினராகவும்,மற்றும் சேலம் தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா அவர்களும்,மற்றும் சேலம் கோட்ட ஊழியர்கள், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கணிதத்தில் கின்னஸ் சாதனை புரிந்த தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற நிலைய மேலாளர் திரு. டி. ஆர். ஜோதிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க