• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் மின்காவாவா பதவியேற்பு

November 24, 2017 தண்டோரா குழு

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் துணை குடியரசு தலைவர் எமர்சன் மின்காவாவா(75) குடியரசு தலைவராக பதவியேற்றார்.

கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டின் குடியரசு தலைவராக இருந்த ராபர்ட் முகாபி, தனது மனைவியின் அரசியல் முன்னேற்றதற்காக, அந்நாட்டின் துணை குடியரசு தலைவராக இருந்த மின்காவாவாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால், ராபர்ட் முகாபி தனது குடியரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா குறித்து கேள்விப்பட்ட அந்நாட்டின் மக்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா இன்று பதவி ஏற்றார்.இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க