• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டாப்பாக்ஸ் நிறுவ சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை செலுத்த தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்

November 1, 2017 தண்டோரா குழு

விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா செட்டாப்பாக்ஸ் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200 க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை எதுவும் செலுத்த தேவையில்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு “விலையில்லா செட்டாப் பாக்ஸ்” களை வழங்கும் பணி கடந்த 01.09.2017 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

அதில் முதல்கட்டமாக தமிழகமெங்கும் 32,000 செட்டாப்பாக்ஸ்களும், மாவட்டம் தோறும் 1000 செட்டாப்பாக்ஸ்கள் வழங்கப்பட்டு,விருதுநகர் மாவட்டத்தின் தலைநகரான விருதுநகர் வட்டத்தில் 1000 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு,எவ்வித சுனக்கமும் இன்றி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உள்ளுர் கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் வாயிலாக கேபிள்டிவி சந்தாதாரர்களிடம் சந்தாதாராகள் விவரங்கள் அடங்கிய படிவத்தினை பூர்த்தி செய்தும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் கையொப்பம் பெற்றும் “செட்டாப் பாக்ஸை நிறுவுதல் மற்றும் செயலாக்கப்படுத்துவதற்காக அரசு நிர்ணயித்த விலை ரூ.200 (இருநூறு மட்டும்) பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விலையில்லா செட்டாப்பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை எதுவும் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, தமிழ்நாடுஅரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் பெற்று பயன்பெறும் சந்தாதாரர்கள் இந்நிறுவனத்தின் விலையில்லா செட்டாப்பாக்ஸ்களை நிறுவும் போது கேபிள் ஆபரேட்டர்களிடம் ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும்.இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2911-யை தொடர்புக் கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க