• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

October 9, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு தீபாவளி வருகின்ற அக் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.தீபாவளி போனஸாக நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400- அதிகபட்சம் ரூ.16,800 பெறுவர்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கும் 10 சதவீதமும்,ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் போனஸாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க