• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு

September 30, 2017 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தில் நடிக்க உள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். லஞ்சத்தை ஒழிக்கும் சுதந்திர போராட்ட தியாக கமல் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இதன்பின் எந்திரன் படத்தில் கமலும் ஷங்கரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடியாமல் போனது. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு ஷங்கருக்கும் கமலும் கைகோர்த்துள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் இன்று வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் இந்தியன் 2 படம் குறித்த அதிகார்பபூர்வ அறிவிப்பை கமலும் ஷங்கரும் இணைந்து வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். கமல் அரசியல் குறித்து பேசிவரும் சூழலில் ஊழல் குறித்த இந்தியன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க