• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக்.25ல் தீர்ப்பு

September 20, 2017 தண்டோரா குழு

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக்.25ல் தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ 1,76, 000 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு அக்.25ம் தேதி வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும், அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவில்லை எனில் அடுத்த 2 அல்லது 3 நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க