• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் லைக்ஸ் பெற காதலியுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை லைவ் செய்த வாலிபர்

September 16, 2017 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாக, ஒரு ஜோடி பாலியல் உறவு வைத்து கொள்ளும் பேஸ்புக் லைவ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனால், அந்த வீடியோவில் உள்ள பெண் தற்போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்து உள்ளார்.அப்பெண் கேரளாவில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.வீடியோவில் இருப்பவர் நபர் தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட செயல் ஸ்ட்ரீமிங் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டது தனக்கு தெரியாது என்றும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நெடுங்கடம் ஓட்டல் தொழிலாளி லினு (வயது 23) என்பவரை கைது செய்து உள்ளனர்.அவரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

இதற்கிடையில், போலீஸ் விசாரணையில் புகார் கொடுத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகவும். கடந்த சில மாதங்களாக அந்த பெண் லினுவுடன் தொடர்பில் இருந்து உள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், லுனுவுடன் அந்த பெண் தகராறில் ஈடுபட்டதால்பழிவாங்க அவர் அந்த வீடியோவை லைவ்வில் விட்டாரா எனபது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து அடிமாலி போலீஸ் அதிகாரி சாபு கூறுகையில்,

லினு பேஸ்புக்கில் உள்ளார். அதனால் அதிக லைக் பெற விரும்பி செய்துள்ளார். ஆனால் இது பழிவாங்கும் ஆபாச ஒளிபரப்பாக இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் இந்த செயலை வீடியோவாக பதிவு செய்வதாக நினைத்து இருந்தார் ஆனால் அது ஒளிபரப்பபாவது அவருக்கு தெரியவில்லை. இந்த வீடியோவில் நிர்வாணத்தில் ஓடிகள் நெருக்கமான செயல்களில் ஈடுபடுகின்றன. எனினும், பாலியல் கட்டாயப்படுத்தப்படுவது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து பெண்ணின் சகோதரிகள் வந்து முறையிட்டனர். இதனால் அவமானமாக இருப்பதாகவும் அதனை சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக லினுவை விரைவில் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்கஉள்ளோம்எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க