• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி

September 8, 2017 தண்டோரா குழு

கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலியானார்.

கோவை ஆனைகட்டி சாலையில் கணுவாய் அடுத்துள்ள டி.எஸ்.பி பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை அந்த வழியாக தடாகத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ராதாகிருஷ்ணன் என்பவர் செங்கள் சூளைக்கு வேலைக்கு செல்வதற்காக வந்த போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை ராதாகிருஷ்ணனை தாக்கி விட்டு சென்றுவிட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக பலியானார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் கோவை வனத்துறையினர் மற்றும் துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்

மேலும் படிக்க