• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெறும் 11பேர் மட்டும் வாழும் நாட்டில் ஆட்சி செய்து வரும் ராஜா !

July 11, 2017 தண்டோரா குழு

உலகில் அளவில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

ஆனால் இன்றளவும் வெறும் 11 பேர் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் ராஜா ஆட்சி செய்து வருகிறார். ஆம்! அது சர்தீனியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தவோலாரா தீவு தான்.

உலகின் மிகச் சிறிய சாம்ராஜ்ஜியமாக அழைக்கப்படும் தவோலாரா தீவு இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இத்தீவின் மொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோ மீட்டர் தான்.

இக்குட்டி தீவின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இதில் ஆச்சரியப்படும் விஷயமே இங்கு ஒரு ராஜா ஆட்சி செய்து வருவது தான். ராஜாவின் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி. இவர் உணவு விடுதியை நடத்துகிறார். தவோலாரா சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது.
22

23

ராஜாவை காணவேண்டும் என்றால் அப்பாயிண்மெண்ட்லாம் வாங்க தேவையில்லை. ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசர்,இதுமட்டுமின்றி தன் தீவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டி சுற்றி காண்பிப்பார்.

உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன. இதை காண்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க