• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 எம்.எல்.ஏ க்களின் நியமனத்தை ஏற்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு

July 10, 2017 தண்டோரா குழு

ஆளுநர் கிரண்பேடி நியமனம் செய்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ஏற்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பா.ஜ.க. நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர், மற்றும் செல்வ கணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கடந்த 5ஆம் தேதி இரவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையில்,கிரண் பேடி வரம்பு மீறி செயல்படுவதாகவும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு தான் இருப்பதாகவும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து,ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும் வந்தனர். இதனால் 3 பேர் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பான கோப்புகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சபாநாயகர் வைத்திலிங்கம்திடம் அனுப்பிய நிலையில் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குறித்த முழு விவரங்கள் இல்லை என்றும், நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை என்று கூறியும் ஆவணங்களை திருப்பி அனுப்பினார்.

தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க