• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் கால்களுக்கு பாலாபிஷேகம்!

July 10, 2017 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் கால்களை இரண்டு பெண்கள் கழுவும் காணொளி காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘குரு பூர்ணிமா’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அம்மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரின் பிரம்மா லோக் தம் என்னும் இடத்தில் நடைபெற்ற விழாவிற்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரகுபர் தாஸ்(62) கலந்துக்கொண்டார்.

அப்போது இரண்டு பெண்கள் ஒரு பெரிய தட்டில் அவருடைய பாதங்களை வைத்து, தண்ணீர் ஊற்றி, ரோஜா இதழ்களை வைத்து பிராத்தனை செய்துவிட்டு, அவரை வரவேற்றுள்ளனர். இதை அங்கிருந்தோர் தங்கள் கைபேசியில் காணொளியாக எடுத்துள்ளனர். பிறகு அதை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காணொளி வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்திற்கு எதிர்கட்சிகள், பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு, பா.ஜ.க கட்சி மற்றும் அனைத்து மாணவர் சங்கம்(AJSU) ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பழங்குடி அல்லாத முதல் முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க