• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏமாற்றிய கார் டீலரின் வீட்டின் முன்பு பெண்நிர்வாணமாக போராட்டம்

July 8, 2017 தண்டோரா குழு

பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்ற டீலரின் வீட்டின் முன்புபெண் வாடிக்கையாளர் ஒருவர நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேசிலில் நாட்டில் உள்ள சாண்டா கேட்ரீனா பகுதியைச்சேர்ந்த கார் டீலர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.

கார் வாங்கிய இரண்டாவது நாளில் அந்த காரை அப்பெண் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கார் பழுதடைந்து நின்றுள்ளது. இதையடுத்து கார் மெக்கானிக்கிடம் அவர் காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த மெக்கானிக், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கார் டீலரிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் காரை விற்றவுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த அப்பெண் கார் டீலரின் வீட்டின் முன் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் வீட்டின் வேலிகள் மற்றும் கதவுகளை கற்களை வீசி சேதப்படுத்தினார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதசாரிகள், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அருகே இருக்கும் மருத்துவமனையில் அவருக்கு மனநல சோதனை நடத்தினர்.மேலும், சிகிச்சை முடிந்த பின் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க