• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவனமாக இருங்க ? சீனா எச்சரிக்கை

July 8, 2017 தண்டோரா குழு

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியாவுக்கு செல்லும் தங்கள் நாட்டினருக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா பூட்டான் மற்றும் சீனாவின் எல்லையாக டோலா லா விளங்குகிறது. இந்த பகுதிக்குள் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனா படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாக் கொண்டுள்ளது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலம் இதனை தெரிவித்துள்ளது.

அதில்,இந்தியா செல்லும் சீனர்கள், பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களது அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ளவும் எனக்கூறியுள்ளது.

மேலும் படிக்க