• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உண்மையான ஹீரோக்களுக்காக பாடகரான ஹர்பஜன் சிங்!

July 8, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாலிவுட் இசையமைப்பாளர் மிதுன் இசையமைக்கும் பாடல் ஒன்றில் விரைவில் பாடவுள்ளார்.

பாலிவுட் பிரபலமான இசையமைப்பாளர் மிதுன் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,

நானும் ஹர்பஜன் சிங்கும் நெருங்கிய நண்பர்கள். நமது கலாசாரத்தைக் கொண்டாடும் விதமாக, அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ‘ஹர்பஜனுக்கு இசை என்றால் மிகவும் விருப்பம். இது குறித்து யோசித்துக்கொண்டிருந்த போது சமயத்தில் உருவானதுதான் பாடல் தயாரிக்கும் ஐடியா..

நாங்கள் உருவாக்கும் இப்பாடல் நாட்டின் நலனுக்கு பங்களித்த உண்மையான ஹீரோக்களை கொண்டாடும் விதமாக இருக்கும். இதற்கு ஹர்பஜன் குரல் கொடுப்பார்.

இதற்காக நாடு முழுவதும் பல இடங்களுக்குச் சென்று இப்பாடலை படம்பிடிக்கப் போகிறோம். என்று மிதுன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த ஆல்பம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்காக ஸ்டூடியோவிலேயே தவமிருந்து தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார் ஹர்பஜன்!

மேலும் படிக்க