• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 4000 பேர் வேலை இழக்கும் நிலை

July 8, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மறுசீரமைப்பு காரணமாக அங்கு பணிபுரியும் 4000 பேர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் செய்திதொடர்பாளர் கூறுகையில்,

“வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு சிறந்த சேவை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முயன்று வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சில ஊழியர்களின் வேலையை பரிசீலித்து வருகிறோம்.வேறு சிலர் தங்கள் வேலையை இழக்கும் நிலையிலுள்ளது. மற்ற நிறுவங்களைபோல், நாங்களும் எங்களுடைய வணிகத்தை மதிப்பீடு செய்கிறாம். இவ்வாறு செய்வதால், மைக்ரோசாப்ட் நிறுவத்தின் சில இடங்களில் முதலீடுகள் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்திய வம்சவாளி சத்யா நாடெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து சுமார் 3,௦௦௦ முதல் 4,000 பேர் வேலை இழப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவத்தின் வேலை இழக்கும் ஊழியர்கள் மற்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க