ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பு,காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் அவரை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.இதனால் மும்பையில் விறுவிறுப்பாக நடந்த ‘காலா’ படப்பிடிப்பில் இருந்து ரஜினி கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், கடந்த சில நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு