• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது – சி.பி.ஐ

July 4, 2017 தண்டோரா குழு

திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் கன்டெய்னர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே 3 கன்டெய்னர்களில் ரூ.570 கோடி பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதாக கூறி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டதாக எதிர்கட்சிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனிடையே இந்த பணம் எங்களுடையது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உரிமை கோரியது.

இதனை ஏற்க மறுத்த திமுக இது குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுக தொடர்ந்த வழக்கை ஏற்று சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது அப்போது சி.பி.ஐ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “கன்டெய்னர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்டது வங்கிப்பணம் தான் . கோவையிலிருந்து அந்த பணம் கன்டெய்னர் லாரி மூலம் ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டது” எனக்கூறியுள்ளது.

மேலும் படிக்க