• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைகைச் செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழிஅழுகிப்போன தக்காளி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்.

June 27, 2017 தண்டோரா குழு

வைகைச்செல்வம் அழுகிப்போன தக்காளி; குழம்புக்கு ஆகாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வனுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

இதற்கிடையில், சினிமா போஸ்டர் ஒட்டுவதற்காக தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் வலம் வந்தவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்படி சினிமா போஸ்டர் ஒட்டியவரை சினிமா துறைக்கே அமைச்சராக்கியதுதான் திராவிட இயக்கம் செய்த ஜாலம் என வைகை செல்வன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சினிமா போஸ்டரை ஓட்டவில்லை. கட்சி போஸ்டரை மட்டுமே ஒட்டினேன்.வைகைச் செல்வன் தனியார் பால் முகவர் போல் பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க தொண்டரா? முகவரா? வைகைச் செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. குழம்புக்கு ஆகாது. வைகை செல்வனுக்கு பதவி எப்படி போனது தெரியுமா? பெண் விசயத்தில் அவர் தவறாக நடந்து கொண்டதால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் படிக்க