• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க இனி ஆதார் கட்டாயம்

June 24, 2017 தண்டோரா குழு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க,திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்,

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதிலிருந்து, அறை முன்பதிவு, சிறப்புத் தரிசனம், லட்டு டோக்கன், ஸ்ரீவாரி சேவை விண்ணப்பம், உண்டியல் காணிக்கை வரை அனைத்துக்கும் ஆதார் எண் அவசியம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், மொபைல் ஆப் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பித்தாலும், அதார் எண்ணைக் குறிப்பிடுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதுத்தவிர திருப்பதிக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு விதிமுறையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. வழக்கம்போல் வெளிநாட்டுப் பக்தர்கள் தங்களது அடையாளமாக பாஸ்போர்ட்டைக் காட்டலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க