• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சி பணியை தொடர்வேன் தினகரன் அதிரடி

June 3, 2017 தண்டோரா குழு

மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மீது டெல்லி போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் அவரது நண்பரும் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

“என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சிப்பணிகளை மீண்டும் தொடர்வேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க