• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வரும் 30ஆம் தேதி அத்வானிஆஜராக உத்தரவு

May 25, 2017 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி அத்வானி , உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது.இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், கடந்த மாதம் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டது.

இதைனையடுத்து, ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். ஆனால் அதற்கு லக்னோ சிபிஐ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி அத்வானி உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷியை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு மாதத்திற்குள் தொடங்கி நாள் தோறும் நடத்த வேண்டும் என்றும், இந்த விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீது கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க