• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்;முதல்வரிடம் 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

May 22, 2017 தண்டோரா குழு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுக ஏற்கனவே இரு அணிகளாக பிரிந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த வாரத்தில் தனித்தனியாக ஆலேசானை கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சத்திலேயே சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளர்கள் தயங்குவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக அம்மா அணியை சேர்ந்த 8எம்எல்ஏக்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
விரைவில் சட்டப்பேரவை கூட உள்ளதால் இந்த சந்திப்பும், எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க