• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் 107 டிகிரி வெப்பம் பதிவானது

May 18, 2017 தண்டோரா குழு

சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.சென்னையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று காலை இதமான சூழல் நிலவிய நிலையில் இன்று காலை 4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு‌ வெப்பம் அதிகரித்து 42 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இது இதற்கு முந்தைய நாட்களில் இல்லாத அளவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்று வறண்ட காற்றாக இருப்பதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.‌

முன்னதாக கடந்த 16-ம் தேதி, தமிழக வரலாற்றில் முதல் முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க