• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

May 17, 2017 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவை வன கோட்டத்தில் காட்டுயானைகள் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் ,காரமடை, சிறுமுகை,பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இன்று அதிகாலை முதலே வனத்துறை அதிகாரிகள் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் என பல்வேறு குழுக்களாக பரிந்து 100-க்கும் மேற்பட்டோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று பிரிவுகளாக கணக்கெடுக்கும் இப்பணியில் இன்று நேர் கோட்டில் யானைகளை பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை யானையின் சானம் வைத்து கணக்கெடுக்கும் பணி , நாளை மறுநாள் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வரும் யானைகளை கணகெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் யானையின் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் ஆண், பெண் மற்றும் குட்டி யானைகள் சதவீகிதம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையிலும் நடத்தப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க