• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

May 15, 2017 தண்டோரா குழு

அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை சாதகமாக பயன்ப்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளை நடத்தி வருகிறது. கோவையில் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அரசுபோக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு பேருந்துகள் ஓடவில்லை.அதைபோல் கோவையிலும் அனைத்து அரசுபேருந்துகளும் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுப்பேருந்து ஓடாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் பேருந்துகள் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் இருந்து உதகை செல்லும் அரசுப்பேருந்துகள் வழக்கமாக கட்டணமாக ரூபாய் 55 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனியார் பேருந்துகள் 120 ரூபாய் கட்டணமாக மேட்டுபாளையம், உதகை ஆகிய இடங்களுக்கு கட்டணம் என்கிற பெயரில் கொள்ளையில் ஈடுபடுகிறது.இதேபோல நகரத்தில் ஓடுகிற தனியார் பேருந்துகள் மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பத்துரூபாயும் அதற்கு மேலும் கட்டணமாய் பயணிகளிடம் வசூலித்து வருகிறது.

இந்நிலையில் கோவை சித்ரா பகுதியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் (வழித்தட எண் 31) ஸ்ரீகுமரன் என்கிற தனியார் பேருந்து குறைந்த பட்சம் பத்துரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை கேள்வி கேட்ட பயணிகளை பாதியில் இறக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து ஆவேசமடைந்த பயணிகள் கோவை ரயில்நிலையம் அருகே தனியார் பேருந்தை நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதுக்குறித்து இப்பேருந்தில் பயணம் செய்த பயணி கூறுகையில்,

மூன்று ரூபாய் கட்டணம் உள்ள இடத்தில் பத்து ரூபாய் என கட்டாயப்படுத்தி பயணசீட்டை திணித்து காசை பிடுங்கினர். கேள்வி கேட்ட சில பயணிகளை பாதியில் இறக்கிவிட்டு நடந்தே செல் என்று கேவலப்படுத்தி அனுப்பினர். ஆகவே, ஏதாவது காவல்நிலையம் வழியாக பேருந்து செல்லும்போது நிறுத்துவது என அனைத்து பயணிகளும் பேசி முடிவொடுத்தோம். அதன்படி ரயில்நிலையத்தில் நிறுத்தி தனியார் பேருந்தின் கட்டண கொள்ளையை அம்பலப்படுத்தினோம் என்றார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனியார் பேருந்தை பறிமுதல் செய்து பந்தய சாலை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை விசாரனை நடத்தி பேருந்து உரிமையாளரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க