• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் – தமிழக முதலமைச்சர்

May 15, 2017 தண்டோரா குழு

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க தமிழக அமைச்சர்கள் உடனடியாக அவர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அமைச்சர்கள் உடனடியாக அவர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர்கள் மாற்று ஏற்பாடு செய்து போக்குவரத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க