• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு மருத்துவர் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ்

May 5, 2017 தண்டோரா குழு

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக மருத்துவ மாணவர்கள் கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க