• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

May 3, 2017 தண்டோரா குழு

ஹரியின் சாமி 2 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் சாமி. இப்படம் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பின் இருவரும் தொடர்ந்து பிசியாக இருந்ததால் அவர்கள் கூட்டணியில் எந்த படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் ஹரி. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது துவங்கியுள்ளன. சாமி முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த திரிஷா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மேலும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாமி இரண்டாம் பாகத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் 20 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் என கூறப்படுகிறது. இதனால்தான் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் சாமி-2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. சாமி 2 படத்தில் விக்ரம் இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

மேலும் படிக்க