• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது

April 29, 2017 தண்டோரா குழு

மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 25பேரை போலீசார் கைதுசெய்தனர்.

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று கோவை இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்டத் தலைவர் .பீர் முஹம்மது, தலைமை நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநில அரசு தற்பொழுது கடைபிடித்து வரும் +2 அடிப்படையிலான மாணவர் சேர்க்கை தொடர வேண்டும்.மாநில அரசின் சுய ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய இரண்டு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க