• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 1-ம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் சிறப்புரையாற்ற உள்ளார்

April 28, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மே 1-ம் தேதி தே.மு.தி.க., சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச உள்ளார் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கையில்

“ தே.மு.தி.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மே 1-ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் உரிமைக்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

எனவே, தலைமை கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க