• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

April 26, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு, ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.244 முதல் ரூ.3080 வரை உயரும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரை ஊதியம் உயரும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.986.77 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அகவிலை படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க