• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆவி தான் ஆனால் தெர்மாகோல் போட்டு மூடுவதாகஇருக்காது- கமல்ஹாசன்

April 24, 2017 தண்டோரா குழு

‘ஆவி’ பற்றிய கதை தான் ஆனாலும் தெர்மாகோல் போட்டு மூடுவதாகஇருக்காது என திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில்ட நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
இயக்குனர் அட்லீயின் முதல் தயாரிப்பாக சங்கிலி புங்கிலி தவ தொற என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஜீவா, ஸ்ரீ திவ்யா, தம்பி ராமைய்யா சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எம்.ஆர்.ராதாவின் பேரன் ஜக் இயக்கிய இப்படத்தின் இசையை கமல் வெளியிட்டார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன்,

என்னுடன் பணியாற்றிய பலரும் இப்படத்தில் இருக்கிறார்கள். ஜக், ஜீவா போன்ற மூன்றாம் தலைமுறை சினிமாக்கார்களும் வந்துள்ளார்கள். உங்களுக்கு முன்னாடி இப்படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம் யார் முதலில் படத்தை பார்த்தது என சினிமா ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் அதனால் தான் ஏனோ பைரசி அதிகமாக வருகிறது என்றார்.

மேலும், இப்படம் ஆவி பற்றிய கதை தான் என்று சொன்னார்கள், பரவயில்லை நன்றாக கவர் பண்ணியிருக்கிறார்கள், இது தெர்மாகோல் மாதிரி இல்லை என்று கூறினார். பின்னர் நீங்கள் வேறு எதுவும் நினைத்து விடாதீர்கள் என்று காமெடியாக பேசினார்.

மேலும் படிக்க