• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா ?

April 24, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா நடத்த வெங்கைய்யா நாயுடுவிடம் நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றவுடன் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தியேட்டர்களில் படங்களை கேமரா வைத்து எடுப்பவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில்,இணையதளங்களில் பைரசி பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர்சென்னையில் நடந்த ஒரு விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்போது, வெங்கைய்யா நாயுடுவிடம் இன்னொரு கோரிக்கையையும் விஷால் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டின் சார்பில் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட விழா ஒன்றை நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் தலைமையில் நடக்க வேண்டும் என்று அமைச்சரிடம் விஷால் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க