• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனம் பரிசு.

April 21, 2017 தண்டோரா குழு

சூரத் வைர வியாபாரி தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்தவர் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா. அவர் வியாழக்கிழமை(ஏப்ரல் 2௦) மாலை பரிசளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு வரும்படி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அழைப்பை ஏற்ற 125 ஊழியர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.அவ்விழாவில் பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சூரத் நகரை சேர்ந்த மற்றொரு வைர வியாபாரி சவ்ஜி தோலாக்கியா என்பவர் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வீடுகள் மற்றும் கார்களை பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க