• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம்

April 21, 2017 தண்டோரா குழு

இலங்கையில் நடைபெறவிருக்கும் வேசாக் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்கிறார்.

இலங்கை நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ‘வேசாக்’ என்னும் புத்த மத விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ‘புத்த பூர்ணிமா’ என்றும் அழைப்பர். இந்த கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள இந்திய பிரதமர் இலங்கைக்கு செல்கிறார். அவர் இலங்கைக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும்.

இந்த விழாவை தொடர்ந்து ‘சர்வதேச புத்த மாநாடு’ நடைபெறுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கிறார். இந்த மாநாட்டில் 1௦௦ நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கின்றனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இம்மாதம் 28ம் தேதி 5 நாள் அரசு பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். இந்த பயணத்தின்போது, இருநாடுகளின் உறவு மேம்படவும் மீனவர்கள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவார் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க