• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசன் நேரில் ஆஜராக உத்தரவு

April 21, 2017 தண்டோரா குழு

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் கமல்ஹாசனை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மே5ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் சினிமா, ஆன்மிகம், திராவிடம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பேசும் போது இந்து மத இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தை மேற்கோள் காட்டி கமல் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மே5ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க