• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழிப்பறை கட்டாதவர்களின் காலில் விழுந்த நகராட்சி ஆணையர்!

April 13, 2017 தண்டோரா குழு

புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, கழிப்பறை கட்டாத பயனாளிகளின் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கழிப்பறையை கட்டுமாறு, கோரிக்கை விடுத்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்காக முதல் கட்டமாக உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 952 பயனாளிகள் கண்டறியப்பட்டு கழிப்பறை கட்டிக் கொள்ள அவர்களுக்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
இதில், 234 பேர் கழிப்பறை கட்டியதால் அவர்களின் வங்கிக் கணக்கில் இறுதி தவணை தொகை செலுத்தப்பட்டது.248 பயனாளிகள் கழிப்பறை கட்டி வருகின்றனர். ஆனால் முதல்தவணையை பெற்ற 470 பேர் இதுவரை கழிப்பறை கட்ட ஆரம்பிக்கவில்லை.

அரசின் நிதியை பெற்றபின்னரும் கழிப்பறை கட்டாமல் காலம் கடத்துவது இத்திட்டத்தின் நோக்கத்தை பாதிக்கும் செயலாகும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்தனர்.

இதையடுத்து அவர்களை கழிப்பறையை கட்ட வைக்க வேண்டுமென்றுஉழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் நேற்று, கவுண்டன்பாளையம், லாஸ்பேட்டை வார்டுகளில் உள்ள பயனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று கழிப்பறை கட்டாதவர்களின் காலில் விழுந்து, கட்டாயமாக கழிப்பறை கட்டக் கோரியும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்தரைத்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க