• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஓராண்டுக்குள் ஆர்கே நகர் தேர்தல்

April 11, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுகுள்ளோ அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12ல் நடைபெறவிருந்தது. எனினும் அதிக அளவு பணப்பட்டுவாடா காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தொகுதியில் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி இருந்தாலும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தலாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951 விதி 151 பிரிவு ஏ அல்லது பி யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுகுள்ளோ அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணபித்து 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.

மேலும் படிக்க