• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்

April 8, 2017 தண்டோரா குழு

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக தேர்தல் கமிஷனராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாலிக் பெரோஸ்கானை தமிழக அரசு நியமித்துள்ளது.அவர் சனிக்கிழமை காலை மாநில தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பதவி ஏற்றார்.

மாலிக் பெரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தவர். அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.மேலும் வருகிற மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க