• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடுத்துச் செல்ல இங்கு எதுவும் இல்லை எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம் – சரத்குமார்

April 7, 2017 தண்டோரா குழு

எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம் என கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,நடிகர் சரத்குமார் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், சரத்குமார் வீட்டின் முன் குவிந்துள்ளனர். அவர்களை சரத்குமார் சமாதானப்படுத்தினார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,

“காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுக்கு நான், முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனினும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொள்கின்றனர் என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் இன்று முதல் நான் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். எனவே, எனது பிரசாரப் பயணத்தைத் தடுக்கவே வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நடைபெறுவதாக நான் நினைக்கிறேன். என்றார். மேலும் என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர்கள் எடுத்துச் செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்” என்று கூறினார்.

மேலும் படிக்க