• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாரிகள் அத்துமீறி செயல்படுகின்றனர் – விஜயபாஸ்கர்

April 7, 2017 தண்டோரா குழு

பாதுகாப்பு படையினர், வருமானவரித் துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருமானவரித் துறையினரின் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். மேலும் மோடிக்கு எதிராகவும், முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆதரவாளர்களை சமாதானம் செய்ய வெளியே வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர். எனது வீட்டில் இருந்து எதையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்யவில்லை. எனது மகளை பள்ளிக்கு அனுப்ப கூட அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்றார்.

மேலும் படிக்க