• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்விட்டரில் பிரதமர் மோடியையே பின் தொடர வைத்த இளைஞர் !

April 5, 2017 தண்டோரா குழு

ட்விட்டரில் மிகச் சிலரையே பின்தொடரும் பிரதமர் மோடியை ஒரே ஒரு பதிவின் மூலம் ஒரு இளைஞர் பின் தொடர வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘ஸ்வச் பாரத்’ என்னும் தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல நட்சத்திரங்களை வைத்தும் அதை பிரபலப்படுத்தியும் வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் ஜெயின். இவரது சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கான அழைப்பிதழில் ‘ஸ்வச் பாரத்’ ‘தூய்மை இந்தியா’வின் லோகோ படத்தினை அச்சடித்து வழங்கியுள்ளனர். இச்செய்தியை ஆகாஷ் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவினை பிரதமர் மோடிக்கு இணைத்து அனுப்பியுள்ளார்.

மேலும், ஆகாஷின் தந்தை தூய்மை இந்தியா திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என விருப்பப்பட்டதால் தனது சகோதரியின் திருமண பத்திரிகையில் ’தூய்மை இந்தியா’ லோகோவுடன் கூடிய படத்தை அச்சடித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக ஆகாஷ் கூறியுள்ளார்.

ஆகாஷின் இந்த ட்விட்டர் பதிவை பல பா.ஜ.க. அரசியல் தலைவர்களும், எம்.பி.களும் ரீ- ட்வீட் செய்து வாழ்த்தியுள்ளனர். இதுமட்டுமின்றி ட்விட்டரில் மிகச் சிலரையே பின்தொடரும் பிரதமர் மோடி, ஆகாஷின் இந்த பதிவுவை பார்த்த பின்னர் ஆகாஷுன் பதிவை மறு ட்வீட் செய்து அவரை பின்தொடரவும் துவங்கியுள்ளார்.

மேலும் படிக்க