• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கட்சியின் பிரிவு தற்காலிகமானது – ஓ. பன்னீர் செல்வம்

April 5, 2017 தண்டோரா குழு

அதிமுக கட்சியின் பிரிவு தற்காலிகமானது என்று புரட்சி தலைவி அம்மா கட்சி தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அதிமுக கட்சியின் பிரிவு தற்காலிகமானது. ஆர்.கே நகர் தேர்தலில் முடிவு வெளியான பிறகு, பிரிந்த இரண்டு அதிமுக பிரிவினரும் ஒன்று சேருவார்கள் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும் சசிகலா கட்சியில் இருக்கும் 122 எம்எல்ஏகள் ஆர்.கே நகர் தேர்தலுக்கு பிறகு, தங்கள் மனசாட்சிக்கு கீழ்படிந்து நல்ல முடிவு எடுப்பார்கள்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த கட்சியை ஜெயலலிதா திறமையாக நடத்தினார். அவர்கள் இந்த கட்சியை கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பாடுப்பட்டனர். அவர்களுடைய கனவை நனவாக்க மக்களுக்கு நானும் திறமையாக சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க